Followers

Friday, June 07, 2013

C4. அதிசயம் - இங்கு மனிதம் செத்துவிட்டது.


அதிசயம் 


இந்த கோடை விடுமுறையில் மதுரையிலுள்ள அதிசயம் பார்க்க சென்னையிலிருந்து எனது பேரன்கள் கணேஷ், பாலாஜி இருவரும் வந்திருந்தனர். அதிசயம் பற்றி ஏன் நண்பர் ஒருவரிடம் விசாரித்ததில்  தெரிந்தது:
1. நுழைவு டிக்கெட் பெரியவர்களுக்கு 500 ரூபாய், சிறியவர்களுக்கு 300 ரூபாய்.
2. வெளியிலுருந்து உணவுபொருட்கள் எடுத்துசெல்ல அனுமதி இல்லை.
3.உள்ளிருக்கும் உணவுவிடுதியில் தரமான உணவு கிடைக்காது. குறிப்பாக     அங்குள்ள சில்லிபரோட்டவை கண்டிப்பாக தவிர்க்கவும். தயிர்சாதம் மட்டும் சாப்பிடவும்.
4. தண்ணீரில் விளையாடுவதை தவிர்க்கவும். தண்ணீரில் கிரிஸ் கலந்திருக்கும். தண்ணீர் அடிக்கடி மாற்றுவதில்லை.
5. வீட்டிற்கு வந்தவுடன் சுடுநீரில் குளிக்கவும்.

விவரம் அறிந்து, 2013-06-01 திங்கள் காலை 10.30 மணிக்கு அதிசயம் சென்றோம். தண்ணீரில் இறங்காமல் குழந்தைகளுக்கான விளையாட்டுக்களில் ஈடுபட்டோம். மதியம் 2 மணிக்கு அங்குள்ள உணவுவிடுதியில் சென்று விசாரித்தபோது அங்கு பிரியாணி, முட்டை, சில்லிபரோட்டா மட்டுமே இருந்தது. தயிர்சாதம் இல்லை.நீண்ட வேண்டுதலுக்கு பிறகு 30 நிமிடம் காத்திருந்தபின்பு புளிப்பான தயிர்சாதம் கிடைத்தது. உணவை முடித்துக்கொண்டு மீண்டும் குழந்தைகளுடன்  மாலை 5.30 மணிவரை விளையாடினோம். கடைசியாக ஒரு ராட்டினத்தில் குழந்தைகள்,என்மனைவி,சகோதரி ஆகியோரை ஏற்றிவிட்டு நான் வெளியிலுள்ள பெஞ்சில் ஓய்வு எடுத்துகொண்டிருந்தேன் 

ராட்டினத்தில் அவர்களுக்கு எதிர்புறம் அமர்ந்திருந்த நால்வரில் ஒருவர் சில்லிபரோட்டாவாக வாந்தியெடுத்து அசிங்கபடுத்திவிட்டார்.
அதற்க்கு அவர் வருத்தம் கூட தெரிவிக்கவில்லை.

இங்கு மனிதம் செத்துவிட்டது.  

No comments:

Post a Comment