2013-05-30 காலை 9.30 மணியளவில் மதுரை சந்திப்பில் திருச்சி-நெல்லை Inter State Ex ரயிலுக்காக காத்திருந்தேன்- எனது பேரன்கள் கணேஷ் மற்றும் பாலாஜியை அழைத்து செல்வதற்காக.
காத்திருந்த ரயிலுக்கு பதில் அந்த நேரத்தில் வந்தது தாதர்-நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில்.
15 நிமிடங்களுக்கும் மேலாக காத்திருந்த அந்த ரயில் மெதுவாக புறப்பட்டது நெல்லையை நோக்கி.
ரயில் புறப்பட்டவுடன் அதனை தொடர்ந்து ஓடிவந்துகொண்டிருந்தனர் - நடுத்தர வயதுள்ள ஒரு ஆண் , பெண் மற்றும் ஒரு குழந்தையுடன்.
ஓடும் ரயிலில் ஏறவேண்டாம் என்று நாங்கள் கூறியும் தொடர்ந்து முயிற்சித்தனர்.
பின்விளைவை அறிந்த அந்த ரயிலின் நடுத்துனர் (Guard) உடனே சிவப்பு கோடி காண்பித்து வயர்லஸ் மூலமும் ரயில் ஓட்டுனருக்கு ரயிலை நிறுத்த சமிக்கை செய்து நிறுத்தினார்.ஓடிவந்த அந்த 3பேர் ரயிலில் ஏறியதும் ரயிலை ஓட்ட சமிக்கை செய்தார் நடத்துனர்.நீண்ட வாக்குவாதத்திற்கு பின் ரயிலை இயக்கினார் ஓட்டுனர்.மனிதாபிமானமிக்க அந்த ரயில் நடத்துனருக்கு நான் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் நன்றி சொன்னோம்.
மனிதம் சாகவில்லை.