இந்த ஆண்டு மதுரையில் வெயில் தாங்கமுடியாத அளவு உள்ளது. எனது மகனும் மகளும் அமெரிக்காவில் குடும்பத்துடன் தங்கியுள்ளனர். அங்கிருந்தே ஊட்டி Zest Resort இல் தங்குவதற்கு எனக்கும் என் மனைவிக்கும் டிக்கெட் பதிவு செய்திருந்தான் என் மகன் அருண் .
திட்டமிட்டபடி santro காரில் பெட்ரோல் நிரப்பிக்கொண்டு 2013-05-08 காலை 6.15 மணிக்கு நாங்கள் முல்லைநகர் , மதுரை வீட்டிலிருந்து புறப்பட்டு திண்டுக்கல் , தாராபுரம் , பல்லடம், காரனம்பேட்டை , அன்னூர், மேட்டுபாளையம், ஊட்டி RTO toll வரை 287 Km தூரத்தை கடந்து 12.10 மணிக்கு வந்து சேர்ந்தோம்.
ஊட்டி RTO toll பிரிவிலிருந்து 29 Km தூரத்தில் உள்ள மசினகுடியில் உள்ள Zest Resort இல் மதியம் 1.10 மணிக்கு நேர்வழியில் சென்று தங்கி உணவு அருந்திட திட்டமிட்டிருந்தோம். ஊட்டி RTO tollபிரிவில் பணியில் இருந்த காவலர்கள் எங்களை தடுத்து நேர்வழியில் செல்ல அனுமதி மறுத்து பைகாரா, நடுவட்டம், கூடலூர், தெப்பக்காடு வழியாக மசினகுடிக்கு 94 Km தூரம் திருப்பிவிட்டனர். மதியம் 1.10 மணிக்கு வரவேண்டிய நாங்கள் மதியம் 2.35 மணிக்கு த்தான் முதுமலை மசினகுடி ZEST Resort வந்து சேர்ந்தோம்.
மதியம் 2.50 மணிக்குத்தான் 62 வயது சர்க்கரை நோயுள்ள என்மனைவி களைப்புடன் உணவு அருந்த முடிந்தது. தேவையற்ற +65 Km பெட்ரோல் +1.30 மணிநேர காலதாமதம் -- இவற்றையெல்லாம் சகித்துக்கொண்டு எங்கள் அறைக்கு சென்றோம்.
பக்கத்து அறையில் தங்கியிருந்தவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்தேன். காரணம் ..அவர்கள் ஊட்டி RTO toll இல் எங்களுக்குபிறகும் காத்திருந்தவர்கள்! 100 ரூபாய் கையுட்டு கொடுத்து 10 வண்டிகள் சுற்று பாதையை தவிர்த்து , காலதாமததையும் தவிர்த்துள்ளனர்.
வருத்தமாக உள்ளது.
No comments:
Post a Comment