Followers

Monday, July 17, 2023

இன்றைய மருத்துவத்தின் நிலை

இன்றைய மருத்துவத்தின் நிலை : சொல்லமுடியாத சோகங்களும், வெல்லமுடியாத வாதங்களும், பேசமுடியாத வார்த்தைகளும், இழக்க விரும்பாதவற்றை இழப்பதும் .. இவையெல்லாம் கொண்டதுதான் இன்றைய மருத்துவம். என்னை ஈர்த்த ஒரு பத்திரிகை பதிவை கீழே தருகிறேன்: ஒருநாள் திடீரென்று குப்புசாமியின் இடதுகால் நீலநிறத்தில் மாறிவிட்டது. பயந்துபோய் ஊரிலுள்ள பெரிய மருத்துவமனைக்கு சென்று மருத்துவரை அணுகி ஆலோசனை கேட்டார். பரிசோதனை செய்துவிட்டு காலில் விஷம் ஏறிவிட்டது என்றும் காலை அகற்றவேண்டும் எனவும் சொல்ல, அதிர்சியடைந்த குப்புசாமி வேறுவழியின்றி காலை எடுத்துவிட ஒப்புக்கொண்டார். சிலநாத்களுக்குபிறகு வலது காலும் நீலநிரத்திற்கு மாற, மீண்டும் அதே மருத்துவமனைக்கு சென்றார்.வலதுகாளிலும் விஷம் ஏறிவிட்டது என்று அந்த காலையும் அகற்ற வேண்டும் என மருத்துவர் சொல்லிவிட, நொந்துபோன குப்புசாமி அதற்கும் ஒப்புக்கொண்டார். இரு கால்களையும் இழந்து கட்டை கால்களுடன் நடமாட ஆரம்பித்த குப்புசாமிக்கு சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அதிர்சி. கட்டை கால்களும் நீலநிறத்தில் மாறிவிட , பதற்றத்துடன் மருத்துவரை அணுக, மருத்துவருக்கு கட்டைக்கால்களில் விஷம் எப்படி ஏறியது என்று ஒரே ஆச்சரியம்! மீண்டும் ஆரம்பத்திலிருந்து அனைத்துவகையான உடல் பரிசோதனைகளையும் முடித்தபின் மருத்துவர் சொன்னார்...“குப்புசாமி, உங்கள் லுங்கி சாயம் போகிறது, மன்னித்துவிடுங்கள்” .... சரி..விசயத்திற்கு வருகிறேன். எனக்கு வயிற்றுவலி. பசியில்லை. காலை ஒரு தோசை..மதியம் ஒர்கரண்டி தயிர்சாதம்,இரவு இரண்டு இட்லி..மலசிக்கல்..என்று சென்னையிலுள்ள ஒரு பிரபல மருத்துவமனைக்கு ஏப்ரல் மாதம் சென்றேன். மருத்துவர் அங்கு ஸ்கேன்,மடேச்டேடுக்கும்படி ற்றும் சோதனைக்கு எழுதிக்கொடுத்தார். சோதனை முடித்து, ரிப்போர்ட் பார்த்து ஒருமாதத்திற்கு மருந்து மாத்திரை எழுதிக்கொடுத்தார். ஏப்ரல் மாதம் மருந்து மாத்திரை எடுத்தபின்பு, மே மாதம் மீண்டும் அதே மருத்துவரை பார்த்து வலி குறையவில்லை என்று கூற, வேறு மருந்து மாத்திரை எழுதி கொடுத்தார்..ஜுன் மாதம் மாத்திரை எழுத்திக்கொடுத்து, ஒரு அலைபேசி நம்பர் எழுதிக்கொடுத்து அவரை தொடர்புகொள்ளும்படி கூறினார். ஜுலை மாதை அந்த நம்பரில் தொடர்புகொள்ள, அவர் ஒரு ஸ்கேன் சென்டர் முகவரி கொடுத்து அங்கு சென்று டெஸ்ட் எடுக்கும்படி கூறினார். அங்கு சென்று டெஸ்ட் எடுத்து, அந்த ரிப்போர்ட்டுடன் ஜுலை மாதம் மருத்துவரை பார்த்தேன். ரிபோர்ட் பார்த்தபின்பு, அங்கேயும் இரு டெஸ்ட் எடுத்து, அந்த ரிப்போர்ட் பார்த்து...மீண்டும் ஒரு அலைபேசி நம்பர் கொடுத்து அங்கு தொடர்புகொண்டு தெரபி சிகிச்சை செய்யும்படி கூறியுள்ளார். 18-7-2023 அன்று தெரபி சிகிச்சைக்கு செல்கிறேன்.. ம்..இதுவரை என் லுங்கி சாயம் போகவில்லை!

Wednesday, July 12, 2023

கருப்பையா தள்ளுவண்டி பஜ்ஜி:

கருப்பையா தள்ளுவண்டி பஜ்ஜி: 1989 ல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை நகர் கிளை மேலாளராக பணியிளிருந்தபபோது ஒரு நாள்.. மாலை 5.௦௦ மணி ..பயணிகளை வெளியே இறக்கிவிட்டு டயர் பஞ்சர் என்று பணிமனை வந்தது நகர் பேருந்து. டயர்மேன் சிவா பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டவரை நிறுத்தி டயர் மாற்றி பயணிகளை விரைவில் பயணம் தொடரசெய்தேன். பிறகு டயர்மேன் சிவாவை அழைத்துக் கொண்டு, பணிமனை எதிர்புறம் சாலையோர தள்ளுவண்டியில் கருப்பையா பஜ்ஜி கடைக்கு சென்று இருவரும் பஜ்ஜி சாப்பிட்டோம். ஒரு மேலாளர் ஒரு தொழிலாளியுடன் சேர்ந்து சாலையோர கடையில் பஜ்ஜி சாப்பிட்டது ..அடுத்து வந்த கிளை மேலாளர் மீட்டிங்கில் விவாத பொருளாகிவிட்டது...அன்று எனது தரப்பில் நான் அளித்த விளக்கம்: அலுவலர்களில் ஒரூ சிலருக்கு பைபிள் பிடிக்கும்..ஒரு சிலருக்கு குர்ரான் பிடிக்கும்..ஒருசிலருக்கு கீதை பிடிக்கும்.. அதுபோலத்தான் எனக்கு மார்க்சியம் பிடிக்கும்.அன்று டயர் பஞ்சராகி பயணிகளை பணிமனை வெளியே இறக்கிவிட்டு வந்த நகர் பேருந்தை, பணிமுடிந்து வீட்டிற்கு புறப்பட்ட தொழிலாளியை, பஞ்சர் டயரை மாற்றி பயணிகளுடன் நகர் பேருந்தை பயணம் தொடரசெய்தால்.. என் சொந்த செலவில் பஜ்ஜி சாப்பிடலாம் என்று சமாதானம் செய்து அவருடன் பஜ்ஜி சாப்பிட்டேன். அதிகாரி தொழிலாளி புரிதல் நன்றாக இருப்பதால், மக்கள் பணியில் தொய்வு இல்லாமல், நிறுவனத்திற்கு நல்ல பெயரும் கிடைக்கிறது. என்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று தள்ளி வைக்காமல், ஒரு சிறந்த நிர்வாகியாக அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பெசிமுடித்தேன். அன்றைய மீட்டிங்முடிவில் அனைவரும் என்னை பாராட்டினர். மாற்றம் ஒன்றே மாறாதது..