Followers

Monday, October 19, 2020

என்னதான் செய்வது?

என்னதான் செய்வது? இடது பக்கமாக படுங்க என்றார் ஒருவர். படுத்தேன். வலது பக்கமாக படுங்க என்றார் இன்னொருவர். படுத்தேன். குப்புற படுக்காதீங்க என்றார். மல்லாக்க படுக்காதீங்க என்றார் இன்னொருவர். படுக்கவிடாமல் படுத்துறாங்களே... காலையில் நடக்க சொன்னார்கள். நடந்தேன். நேராக நடக்க கூடாது, எட்டு போட்டுதான் நடக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். காலையில் எழுந்தவுடன் ஒரு டம்பளர் தண்ணீர் குடித்துகொண்டிருந்தேன். போதாது போதாது..அதனுடன் எழுமிச்சையும் பிழிந்து குடிக்கவேண்டும் என்று சொன்னார்கள். கேன்சர் உறுதியாக வராதாம்.!! உருளைக்கிழங்கு அளவோடுதான் ருசியாக சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வாயு என்றார்.. வாயில் படுவதை மறந்தேன்... உலக நாடுகளில் இதுமட்டும்தான்... வேறு வழியில்லை.. சாப்பிடுங்க என்றார்கள்... இனிப்பை தொட்டுவிடதீர்கள் ..அவ்வளவுதான்.. சுகர் ஏற்றிவிடும் என்றார்.. சரி என்று நிறுத்தினேன். நடக்கும்போது நண்பர் சொன்னார்.. லோசுகர் ஆகிவிடும், பாத்துக்குங்க.. அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க என்றார். இப்படித்தான் குளிக்கவேண்டும் என்றார்.. ஐயோ, தப்பு, அப்படி குளிங்க என்றார்.. குளிக்கக்கூட சுதந்திரமில்லை.. தந்திரமா குளிக்கணும் என்றார். காப்பி, டி வேண்டாம், அரிசி கஞ்சி வேண்டாம், பால் வேண்டாம், ஐஸ்வாட்டர் வேண்டாம், பாட்டில் ஜுஸ் வேண்டாம் என்றார்... சரசரி என்று பழகினேன்.. ஒன்று புரிந்தது.. ஒன்றும் தெரியாமல் இருந்தாலும் ஆபத்து.. அதிகமாக தெரிந்தாலும் ஆபத்து.. நல்லா போய்கொண்டிருந்த வாழ்க்கையில், உடம்பை பாத்துக்கங்க என்று சொல்லி உடம்பையே பார்த்துட்டு இருந்ததன் விளைவு, மனசு வம்பா போச்சு... எல்லோர் பேச்சும் கேட்பதும் ஆபத்து.. ஒருத்தர் பேச்சும் கேட்காமல் இருந்தாலும் ஆபத்து.. வாழ்க்கை, வாழை இலையில் விழுந்த ரசம் போல.. எந்த பக்கம் ஓடுது என்றே தெரியாமல் ஓடுகிறது. வாழ்க்கை ரசத்தை குடிக்க முடியலையே? அதிக விஷயம், விஷம். இயல்பா இருங்க. ஒன்னும் குடி முழுகிப் போய்விடாது.

Monday, October 12, 2020

எத்தனை முறை இறப்பது?

மனிதன் எத்தனை முறை இறப்பது ?

அவர் இறந்து விட்டார் 
அடக்கம் செய்யணும்
சொல்லிக் கொண்டே சென்றார்கள்..!! 
.
மெல்ல எட்டிப் பார்த்தேன் 
மூச்சு இல்லை – ஆனால் 
இப்போதுதான் இறந்திருந்தார் 
என்பதை மட்டும் நம்ப முடியவில்லை..!!  
.
இருபது வருடங்கள் 
முன்னாடி – அவர் மனைவி 
இறந்த பிறகு – சாப்பிட்டாயா..!! 
என்று யாரும் கேட்காத 
நேரத்தில் – அவர் இறந்திருந்தார் 
யாருமே கவனிக்க வில்லை...!!
.
பொண்டாட்டி போனதுமே
போய்த் தொலைய வேண்டியதுதானே – என்று
காதுபட மருமகள் பேசியபோது 
அவர் இறந்திருந்தார் அப்போதும் 
யாருமே கவனிக்க வில்லை...!!
.
தாய்க்குப் பின் தாரம் 
தாரத்துக்குப் பின் ..
வீட்டின் ஓரம் ...!!! 
என்று வாழ்ந்த போது – அவர் 
இறந்திருந்தார் 
யாருமே கவனிக்க வில்லை ..!!!
.
காசு இங்கே 
மரத்திலேயா காய்க்குது - என்று 
மகன் அமிலவார்த்தையை 
வீசிய போது..!!! 
அவர் இறந்திருந்தார் 
யாருமே கவனிக்க வில்லை...!!
.
என்னங்க...!!! 
ரொம்ப தூரத்திலே இருக்குற 
முதியோர் இல்லத்திலே விட்டு 
தலை முழுகிட்டு வந்திடுங்க...!!! 
என்று காதிலே விழுந்த போதும் 
அவர் இறந்திருந்தார் 
யாருமே கவனிக்க வில்லை...!!! 
.
உனக்கென்னப்பா...!!!
பொண்டாட்டி தொல்லை இல்லை 
என்று வாழ்த்துவது போல 
கிண்டலடிக்கப் பட்ட போது 
அவர் இறந்திருந்தார்..!!!
அப்போதும் யாருமே கவனிக்க வில்லை .
.
இப்போதுதான்
இறந்தாராம் என்கிறார்கள்..!!!
எப்படி நான் நம்புவது..???
நீங்கள் செல்லும் வழியில் 
இப்படி யாராவது
இறந்து கொண்டிருப்பார்கள்... 
ஒரு வினாடியாவது நின்று
பேசி விட்டுச் செல்லுங்கள்..!!! 
.
இல்லையேல்...!!!! 
.
உங்கள் அருகிலேயே 
இறந்து கொண்டிருப்பார்கள் 
புரிந்து கொள்ளுங்கள் ..
.
வாழ்க்கை என்பது 
வாழ்வது மட்டுமல்ல..!!! 
வாழ வைப்பதும்தான் ..!!!!

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது...

Wednesday, April 29, 2020

நாதன் தாள் போற்றி,,


[16:55, 4/28/2020] Saravanabhava G: அருணகிரிநாதன்
ஸ்ரீமூலநாதன்.....
எனக்கு மூத்தவர்கள்...
முன்பின் அறியாதவரிடமும்
வெறுப்பினை நீத்தவர்கள்...
கூடல் நகரில்
ஊடலறியாது
உயர்ந்தவர்கள்...
அன்பே  தகழியா
ஆர்வமே நெய்யானவர்கள்....
அருணோதயத்தின்
மூல நாயகர்கள் .....
அன்று  முதல்
இன்று  வரை
நட்பால்  இவர்கள்
நாட்டிய  விடயம்
எதிர்கால  இளவல்களுக்கு
இனியதோர் தடயம்.
இருவரின்  இதயமோ
இனிய  சிறை....

Monday, April 13, 2020

Chest Pain-2

10-10-2019 வியாழன் இரவு 7.15 மணிக்கு நெஞ்சுவலி வித்யாசமாக இருந்தது.
அவசரநிலை மாத்திரைகள் அருகில் இருந்த போதும் அதனை தொட என் மனம் நாடவில்லை. நல்ல சாவை நோக்கி நான் தயார்நிலையில் உள்ளேன்.. எல்லாம் முழுமையாக மகிழ்ச்சியாக இவ்வுலக வாழ்க்கையை அனுபவித்த பின்னர் பிறருக்கு இடையூறு கொடுக்காமல் விடைபெறவே விரும்புகிறென்.
ப்பிரியமுடன்,
சரவணபவா

13-04-2020 திங்கள்  காலை 10.00 to 12.00 மணிவரை  மீண்டும் நெஞ்சுவலி. வலி அதிகம்தான். மாத்திரை இல்லை. கொரானா காரணமாக மானிடமே இயல்பு வாழ்க்கையை இழந்து தவிக்கும் நிலையில்..என்ன செய்வது?
பிறருக்கு இடையூறு கொடுக்காமல் விடைபெறவே விரும்புகிறென்.
ப்பிரியமுடன்,
சரவணபவா