Followers

Friday, September 16, 2016

A4. விலைஇல்லாததின் விளைவு !

 விலைஇல்லாததின் விளைவு !

15-9-2016 மதியம் 1.15 மணியளவில் மதுரை வணிகவளாகம் பேருந்து நிறுத்தத்தில், திருமங்கலம் செல்லும் 48Y அரசு நகர் பேருந்தில் ஓட்டுனர் இருக்கை பின்புற இருக்கையில் இடம் பிடித்தேன். என் அருகில் பள்ளி சீருடையில் ஒரு சிறுவன் அமர்ந்தான்.

வாகனம் புறப்பட்டு அடுத்த,  மதுரை கல்லூரி நிறுத்தத்தில் நிற்கும்போது “சார் ஒரு உதவி செய்வீங்களா?” என்று அந்த சிறுவன் என்னிடம் கேட்டான். என்ன உதவி என்று கேட்டேன். பத்து ரூபாய் இருந்தா கொடுங்கள் சார். திருநகர் 3 வது நிறுத்தத்தில் இறங்கி, சீனிவாசா காலனி என் வீட்டிற்கு ஷேர் ஆட்டோவில் போகனும். இல்லைன்னா நடந்துதான் போகணும். மாலைதான் ஸ்கூல்பஸ் வரும் என்றான்.

நாளைக்கும் இதுபோல்தான் பத்து ரூபாய், பஸ்ஸில் கேட்பாயா? உன் அம்மா அப்பா என்ன செய்கிறார்கள்?
உன்கூட பிறந்தவர்கள் எத்தனைபேர்? என்று விசாரித்தேன்.
 என் பெயர் ஷேக்தாவுத், மதுரை, காமராஜர் சாலை, சௌராஷ்டிரா ஹையர் செகண்டரி ஸ்கூலில் 8c வகுப்பு படிக்கிறேன். என் அண்ணனும் இதே ஸ்கூலில் 9 ம் வகுப்பு படிக்கிறான். அம்மா சீனிவாசா காலனி வீட்டில் இருக்காங்க. அப்பா சென்னையில் தறி வேலை செய்றாங்க. மாசா மாசம் வீட்டுக்கு வந்து பணம் கொடுப்பாங்க என்றான்.

எனது அலைபேசி கேம்ஸ்கேனர் மூலம் சிறுவனது விலையில்லா பயண அட்டை மற்றும் பள்ளி அடையாள அட்டை இரண்டும் பதிவு செய்தேன். சிறுவன் என்னிடம் சொன்னது உண்மை என்று தெரிந்தது. எக்காரணம் கொண்டும் இனிமேல்  பிறரிடம் கையேந்தக்  கூடாது என்று சிறுவனுக்கு அறிவுரை கூறி பத்து ரூபாயை கொடுத்தேன். சிறுவனும் நானும் பேசியதை எனது வாய்ஸ்ரிக்கார்டர் பதிவு செய்து விட்டது.  திருநகர் 3 வது நிறுத்தம் வந்ததும் சிறுவன் இறங்கிவிட்டான். ஷேர் ஆட்டோவிற்கு காத்திடுக்காமல் காலில் செருப்பு இன்றி, தார் சாலையில் சீனிவாசா காலனி வீட்டிற்கு நடந்தே செல்வதை, பேருந்தில் அமர்ந்தபடியே கவனித்து மனம் கரைந்தேன்
.
மதியம் 1.45 மணியளவில் எனது நிறுத்தத்தில் இறங்கி வீடு திரும்பினேன்.
இனாம் கேட்பவர்களின் தேவைக்கு பண உதவி செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது.
பசித்தவர்க்கு உணவு வாங்கி கொடுப்பதில் பிரியமானவன் நான். அப்போதும்கூட “பசித்தவர்க்கு சாப்பிட மீன் கொடுப்பதைவிட, மீன் பிடிக்க தூண்டில் வாங்கி கொடுப்பதே சிறந்தது” என்ற தோழர் மாவோ அவர்களை படித்ததுதான் என்னை முழுமையாக ஆக்கிரமிக்கிறது!

என் மனதை குடைந்த இரு விசயங்களை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்:
1.சீனிவாசா காலனி-காமராஜர் சாலை சௌராஷ்டிர ஹையர் செகண்டரி ஸ்கூல் 13 Kms பயணம் செய்ய 8ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஷேக்தாவூத்திற்கு, இலவச பயண அட்டையை வழங்குவதற்கு முன்பு, வீட்டிற்கு அருகில் திருநகர், பசுமலை பகுதியிலேயே பள்ளிகள் இருந்தும் ஏன் தேவையின்றி அதிக பயணத்தை ஊக்குவிக்கும் நிலை...நிர்வாகம் அரசின் உயர்மட்டத்துடன் கலந்து ஆலோசித்து இனியாவது ஒரு முடிவு எடுக்கலாமே.

2. சிறுவன் ஷேக் தாவுத்திற்கு இலவச பயண அட்டை இல்லாதிருந்தால், அவனது பெற்றோர்கள் அவனை அருகிலுள்ள பள்ளியில்தானே சேர்த்திருப்பார்கள். சிறுவனுக்கும்  பயணக் களைப்பு  குறையுமே.

விலையில்லாததின் விளைவுதான் காரணமா? யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்.../..செய்யுங்களேன்.



நல்லது நடக்கட்டும்.


-சரவணபவா




  

Monday, August 22, 2016

A3. புத்துணர்ச்சி முகாம்..


இணையருடன் இனிய பயணம் !

வழக்கம்போல் இந்த ஆண்டும் ஒரு சூழல் மாற்றம் விரும்பி கொடைக்கானல் செல்ல நானும், என் இணையரும் திட்டமிட்டோம். என் இணையரின் வாகனம் TN58P 6216 Santro   தயார்நிலையில் வைக்கப்பட்டது. என் இணையரின் கல்லூரிக் காலம்தொட்டு 10  ஆண்டுகளாக அவரின் நம்பிக்கைக்குரிய வாகன ஓட்டுனராக தோழர் ராஜா ..
6-7-2016  காலை 8.00 மணிக்கு மதுரை, முல்லைநகர் இல்லத்திலிருந்து நானும், என் இணையரும் கொடைக்கானல் புறப்பட்டோம். வாடிப்பட்டி டெம்பிள் சிட்டி உணவகத்தில் காலை 9.00 மணிக்கு சிற்றுண்டி. பயணம் தொடர்ந்தது. காலை 11.25 மணியளவில் கெங்குவார்பட்டி அருகில் கொடைக்கானல் மலை ஏற்றத்தில், திடீரென சாலையின் குறுக்காக ஒரு பெரிய மரம் விழுகிற காட்சி.. எங்களுக்கு முன்சென்ற வாகனம் இருநிமிடம் முன்னதாக சம்பவ இடத்தைக் கடந்து தப்பியது. 11.27 மணிக்கு எங்கள் வாகனத்தை மரம் விழுந்த இடத்திற்கு சில அடி தூரத்திலேயே தோழர் ராஜா நிறுத்தியதால், மயிரிழையில் நாங்களும் தப்பினோம்.
“ஒரே நேரத்தில் ஒரே இடத்தை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் அல்லது மேற்ப்பட்டவைகள் ஆக்கிரமிப்பதின் விளைவினாலேயே விபத்து ஏற்படுகிறது!” என்பதை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பயிற்சி மையம் வகுப்பில் நான் கற்பித்த முக்கிய பாடத்தை செயல்முறையில் கண்டேன்!
எங்களுக்கு முன்சென்ற வாகனம் இருநிமிடம் தாமதித்திருந்தாலும், அல்லது எங்களது வாகனம் இருநிமிடம் முன்சென்றிருந்தாலும், அந்த பெரிய மரம் எங்களது வாகனத்தின் மீது விழுந்திருக்கும்.
நாங்கள், எங்கள் பயண காலங்களில் இதுபோன்ற பல நிகழ்வுகளை சந்தித்திருப்பதால், ஆகவேண்டிய காரியங்களில் இறங்கினோம். விழுந்த மரத்தின் மிக அருகில் எங்களது வாகனம் ..பின்தொடர்ந்து வந்த பல வாகனகளும், எங்களுக்கு எதிர்புறம் விழுந்தமரத்தின் அப்பால் பல வாகனங்களும் சிலநிமிடங்களில் சாலையில் தேங்கிவிட்டன. மரத்தை அப்புறப் படுத்தினால்தான் வழித்தடம் பயன்படுத்த முடியும்.
காவல்துறைக்கு, தீ அணைப்புத் துறைக்கு,..அவசர உதவிக்கு அலைபேசியில் தகவல் கொடுக்கலாம் என்று சிலர் யோசித்துக்கொண்டிருந்தனர்.
வாகனத்திலிருந்து முதலாவதாக நானும் எங்களது ஓட்டுனர் தோழர் ராஜாவும் முதலில் இறங்கி விழுந்த மரத்தின் அருகில் சென்றோம். மரத்தைப் பிடித்து நகர்த்த முயற்சித்தோம்...!சாலத்த்டை ஏற்படுத்திய மரத்தின் இருபுறமும் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களில் இருந்தவர்கள் இதைப்பார்த்தவுடன் ஒவ்வொருவராக எங்களுடன் சேர்ந்தனர்.
ஒரு கூட்டு முயற்சியில் ( Team Spirit ) சிலநிமிடங்களில் மரம் அப்புறப்படுத்தப்பட்டது! வழித்தடம் போக்குவரத்திற்கு தயாரானது! அனைவர்க்கும் நன்றிகூறி பயணம் தொடர்ந்தோம்.
6-7-2016 முதல் 8-7-2016  முடிய 3 நாட்கள் மகேந்திரா கிளப் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்து, 8-7-2016  மாலை 3.00  மணிக்கு மதுரை, முல்லைநகர் இல்லம் திரும்பினோம்.
“சூழல் மாற்றம்” ..மனம் சுத்தமானது... அடுத்து எங்கு? எப்போது?  என் இணையரின் உத்திரவிற்காக காத்திருக்கிறேன் !
மீண்டும் சந்திப்போம்
-சரவணபவா .         


Friday, August 19, 2016

A2. மாற்றம் ஒன்றே மாறாதது

என் இனிய  நண்பர்  பாலு  சென்ற வாரம்  சிங்கப்பூரிலிருந்து  சென்னை  வந்திருந்து,  என்னிடம்  தற்போதைய  நாட்டு நடப்பு பற்றி  விவாதிக்க ஆரம்பித்தார்.  மல்லையா  போன்ற  பணமுதலைகள்  வரி செலுத்தும் நிலையை  தவிர்க்கும் சூழலில் , மாதாந்திர  ஒய்ஊதியம்  பெரும்  முதியவர்களிடமும்,  சிறு வியாபாரிகளிடமும், ஏழை மக்களிடமும்  மட்டும் கறாராகவும், அதிக அளவிலும்  வரி வசூல்  செய்யப்படுகிறது.

பிரச்சினைகளை  எப்படி தீர்ப்பது  என்பதை  அறியாதவர்களிடம் இவற்றை தீர்க்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருபதுதான்  பெரிய பிரச்சினை. பிரச்சினைகளை தீர்க்கச்செய்யும் முயற்சிகளாலேயே புதிய பிரச்சினைகள் தோன்றிவிடுகின்றனவே!  உங்களிடம் இந்த பிரச்சினைகளை தீர்க்கும் பொறுப்பை கொடுத்தால்  என்ன செய்வீர்கள்? இப்படித்தான் ஆரம்பித்தது எங்கள் உரையாடல்..நண்பர் பாலு திருவாய் மலர்ந்தார்...

அண்ணே..என் அரசாங்கத்தில் 50 வயதுதான் உச்சவரம்பு.அதற்குமேல் பேசக்கூடாது.50 வயதுவரை பிரச்சினை இல்லை.நல்லா உழைப்பீங்க.நாட்டுக்கு பயன்படும்.முழுமையான உங்கள் சக்தியால் நாடு முன்னேறும்.50 வயதுக்குமேல் உங்களால் நாட்டுக்கு பிரயோசனம் இல்லை.உங்கள் உழைப்பு குறைகிறது.உங்களுக்கு செய்யவேண்டிய வசதிகளால் அரசாங்கத்திற்கு பொறுப்பு கூடுகிறது.மான்ய விலையில் உணவு, எரிபொருள் மருத்துவம் போக்குவரத்து, இருப்பிடம்...இவைகளை உழைக்கும் திறன் குறைந்த உங்களுக்கு அரசு கொடுக்க வேண்டியுள்ளது.இந்த சூழலில் நீங்கள் அதிகநாள் வாழ ஆசைபடுவதால் , நீங்கள் அரசுக்கு அதிக வரி செலுத்த வேண்டும்.அதிக வரி செலுத்த முடியவில்லையா..உங்க உரிமம் காலாவதியாகிவிட்டது.இடத்தை காலிசெயுங்கள்.

வயதுவரம்பிற்கு ஏற்றபடி  வரி விதிக்கப்படும்.வயது உயர உயர வரியும் உயரும். ஆயுள் கூடக் கூட, ஆயுள்வரியும் கூடும்.ஆயுள் குறையக் குறைய ஆயுள்வரியும் குறையும்.வசதிகள் கூடும்.மக்கள் சுபிட்சமாக இருப்பார்கள்.அன்னன் திண்ணையை காலி செய்துவிட்டதால் இருப்பவர்களுக்கு எல்லா வசதியும் கிடைக்கும்.

இப்ப நம்ம வீட்டுலே 10 நபர்கள் இருந்தால் 2 நபர்கள்தான் சம்பாதிப்பார்கள். 6 நபர்கள் வயசாகி, நோய்வாய்பட்டு, வெட்டியாய் இருப்பார்கள்.அவர்களின் ஆயுள் உரிமம் காலியானதை கூறி அவர்கள் இடத்தை காலி செய்துவிட்டால், சம்பாதிப்பவர்கள் நிம்மதியா வாழ்வார்கள். வருமானத்தை சிறுக சிறுக சேமித்து வைத்து வீடு, வாகன வசதிகளை பெருக்கி தங்களின் சந்ததிகளை வளமாக விட்டுச்  செல்வார்கள்.

அமலாக்கப் பிரிவின் மூலமாக, கீழ்கண்ட அட்டவணைப்படி வரிவசூல் செய்யலாம்.! நாம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இயக்கம் அதன்வழியில் இயங்கிக் கொண்டிருக்கும்.         


ஆயுள் காப்பீட்டு வரி :

வயது   ஆயுள் வரி         வாழ்வியல் அமைப்பு 
  
1 – 5         1 %         குழந்தை பிறந்தவுடனேயே தாய்ப்பாலை தவிர                           மற்ற அனைத்தும் அரசின்                     .      பொறுப்பாகும்.
6 – 16        2 %         ஆரம்பக் கல்வி முதல் உயர்நிலை பள்ளிக்                               கல்வி முடிய வாழ்வியல் சார்ந்த
                          தரமான கல்வி..உணவு, சீருடை, மருத்துவம்.
17 – 20       3 %          மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற                               உயர்மட்டக் கல்வி
21 – 24       4 %          மனதிற்கு பிடித்த நிரந்தர வேலை. போதுமான                           ஊதியம்.
25           5 %          திருமணம்..சாதி, மதம், மொழி, பூகோள                                 வேறுபாடு இன்றி. ஆண், பெண்                                                                    அவசியம் வேலை பார்க்க வேண்டும்.
26           6 %          முதல் குழந்தை.
28           7 %          இரண்டாவதும் கடைசியுமான குழந்தை.                                 கட்டாயமாக கருத்தடை சிகிச்சை.
29 – 30       8 %          குழந்தைகளுடன் மகிழ்வான தருணம்
30 – 40      25 %          வாரத்தின் கடைசி இரு நாட்கள் கட்டாய                                 சுற்றுலா
40 – 50      50 %          இரு குழந்தைகளின் திருமணம்.


51 -100     100 %          உபரி வாழ்க்கை..

ஏதோ இரவுப் பொழுதில் விளையாட்டாக கதைத்துவிட்டேன். எப்படியாவது மாற்றம் நிகழ்ந்தால் சரித்தான் என்றார் நண்பர் பாலு.
வால்காவிலிருந்து கங்கைவரை ..ராகுல்ஜியிடம் கதைப்பதுபோல் இருக்கிறது பாலு.!
தற்போதைய சூழல் நிச்சயமாக மாறும்.
மாற்றம் ஒன்றே மாறாதது..
நிம்மதியாக தூங்குவோம்!
தூங்கும்போது ஏதாவது நடந்துவிடும் என்று தூங்காமலே இருக்கமுடியுமா?
Good Night..