மூளைச்சாவு சிறுவன் உடலுருப்புகள் தானம்!
ஆறு வயது மகன் அனிஷ் மற்றும்
மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் மதன் சென்றபோது, திடீரென குறுக்கே வந்த நாய் ஒன்றினால்
நிலைதடுமாறி இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில், சிறுவனுக்கு பலத்த அடி ஏற்பட்டது
சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டு, சிறுவன் மூளைச்சாவு அடைந்ததை, மருத்துவர்கள் உறுதி செய்தனர். தன்
மகனின் உறுப்புகளை தானம் செய்ய மதன் ஒப்புகொண்டதை அடுத்து, சிறுவனின் கண்கள், சிறுநீரகங்கள்,
கல்லீரல் ஆகிய உறுப்புகளை, தனியார் மருத்துவமனை நிர்வாகம் தானமாக பெற்றது. தானமாக பெற்ற தனியார் மருத்துவமனை நிர்வாகம், சிறுவனின் உடலை பிரேத பரிசோதனை
செய்ய, அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தது..
ஆனால் அங்கோ..
விபத்து நடந்த இடம் அரசு பொது
மருத்துவமனை நிர்வாக எல்லைக்குள் வராது..ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு செல்லுங்கள்
என்று கூறப்பட்டது.
“உடல் உறுப்புகளை தானமாக பெற்ற,
தனியார் மருத்துவமனை நிர்வாகம் அதுகுறித்து தங்களிடம்
முன்கூட்டியே தெரிவித்து, அனுமதி பெறவில்லை. எனவே பிரேத பரிசொதனை செய்யமுடியாது”.
என ராயபேட்டை
அரசு மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
நீண்ட போராட்டதிற்க்கு
பிறகே, ஒருவழியாக, பிரேத பரிசொதனை முடிந்து, சிறுவன்
அனிஷ்குமார் உடல் பெற்றோர்களிடம் ஒப்படைக்கபட்டது.
தினமலர் 26-6-2013 நாளிதழில்
மேலேகண்ட செய்தியை படித்ததும், மதுரை அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவகல்லூரிக்கு
கண்கள் மற்றும் உடலை தானமாக அளித்துள்ள நான் மிக்க அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
ஒரு கடவுள், ஒரு ஆசிரியர், ஒரு வழிகாட்டி என்ற அளவில் மதிக்கபட வேண்டிய சிறுவன் அனிஷ்
உடல் அநியாயமாக அலைக்கழிக்கப்பட்டது….மனிதநேயம் உள்ள அனைவருமே வேதனைப்படவேண்டிய, வெட்கபடவேண்டிய
ஒன்றாகும்.
எனக்கு சில விசயங்கள் புரியவில்லை….
*மூளைச்சாவு அடைந்தால் அரசு
மருத்துவமனைக்குத்தான் செல்லவேண்டுமா? அங்குதான் பிரேத பரிசோதனை செய்யமுடியுமா?
**தனியார் மருத்துவமனை நிர்வாகம்,
அரசு மருத்துவமனை நிர்வாகத்திடம் இதுகுறித்து முன்கூட்டியே தெரிவித்து அனுமதி பெறவேண்டுமா?
***பிரேத பரிசோதனை முடிந்த
உடலை அரசு மருத்துவகல்லூரிக்கு கேடவராக பயன்படுத்த முடியுமா?
****சிறுவன் அனிஷ் குடும்பத்தினர்
மனஉளைச்சல் மற்றும் இதர இடர்களுக்கு யார் அல்லது எது காரணம்?
இன்று அனிஷ்..நாளை நான்? அனிஷ்
குடும்பத்தினரின் உறவினர்கள் சுமார் 50க்கும் மேற்பட்டோர் போராடியதைபோல நாளை என் உறவினர்களும்
எனது கண்கள் மற்றும் உடல்தானதிற்கும் போராடத்தான் வேண்டுமா?
சம்பதப்பட்டவர்கள் யோசிக்கவேண்டிய
விசயம் இது. –சரவணபவா 26-6-2013

.jpg)