Followers

Wednesday, June 12, 2013

B9. உடல் தானம் - கேடவர் விருப்பம்

தரையில் மனிதனுக்கு மீன் உணவு. தண்னீரில் மீனுக்கு மனிதன் உணவு. இன்றும் கங்கைநதியில் உயிரற்ற மனிதனை மீன்களுக்கு உணவாக தள்ளிவிடுகின்றனர். சிலஇடங்களில் உயிரற்ற மனிதனை கழுவிற்க்கு உணவாக மலை உக்சியில் வைத்துவிடுகின்றனர். என் சிறுவயது முதல் என்னை பாதித்த செய்திகள் இவை.

பொதுவாக இறந்தபின்னர் உடலை எரிப்பது அல்லது புதைப்பது நமது நாட்டில் வழக்கம். இறந்தபின்னர் அவர் சார்ந்துள்ள சமூகத்தின் வழக்கத்தின்படி இது நடைபெறும். புதைப்பதாலும் எரிப்பதாலும் நிலம் மற்றும் காற்று மாசு அடைகிறது. எனவே உடலை தானமாக வழங்கினால் அதனை மருத்துவ கல்லூரி மாணவர்கள் பயன்படுத்துவதன்மூலம் மருத்துவ துறைக்கு பெரும் உபயோகமாக இருக்கும். இறந்தபின் உடலை ‘கேடவர்’ என்கின்றனர். கேடவர் என்ற இறந்த மனிதரது உடலானது மருத்துவகல்லூரி மாணவர்களின் அகராதியில்- ‘அது ஒரு கடவுள், அது ஒரு ஆசிரியர், அது ஒரு வழிகாட்டி’ என்ற அளவில் மதிக்கப்படுகிறது
.
ஒருமனிதன் தனது உடலை தானமாக கொடுக்கவேண்டுமானால் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்:
*மருத்துவ கல்லூரியின் உடற்கூறு பிரிவில் இதற்கென தனி படிவம் உள்ளது. அதனை பெற்று பூர்த்தி செய்யவேண்டும்.
** பத்திரத்தாளில் தானம் கொடுப்பவர் தனது ஒப்புதலை தெரிவிக்கவேண்டும். அவரது ரத்தசம்பந்தமான உறவினர் (முதியவராக இருந்தால் அவரது மணைவி, மகன் அல்லது மகளும், இளையவராக இருந்தால் பெற்றொர், உடன்பிறந்தவர்கள்) ஒப்புதல் கொடுக்கவேண்டும்.
*** தானம் கொடுப்பவரின் தற்போதய முகவரி
**** தானம் கொடுப்பவர் இறந்ததும் அவரது உடல் எந்த ஊருக்கு/இடத்திற்கு கொண்டுபோகப்படும் என்ற விபரம்.
***** இறந்தவர் உடலை எவ்வளவு நேரம் கழித்து தருவார்கள்?
****** இறந்தவர் குறித்து டாக்டர் வழங்கும் இறப்பு சான்று.
இந்தபடிவத்தை பூர்தி செய்து, அதோட நோட்டரிபப்ளிக் சான்று இணைக்கவேண்டும். இறந்துபோனதும் தாமதிக்காம மருத்துவ கல்லூரி உடற்கூறு பிரிவுக்கு தொடர்பு கொள்ளவேண்டும்.

இறந்துபோன 4 அல்லது 5 மணிநேரத்திற்குள் உடல், அரசு மருத்துவமணையில் ஒப்படைக்கப்பட வேண்டும்.
மருத்துவக்கல்லூரி மாணவர்கள் படிப்புக்காவே இது பயன்படுகிறது.இறந்தபிறகு வாரிசுகள் முறையாக சம்பத்தப்பட்ட கல்லூரிக்கு தகவல் தெரிவிப்பதில்லை. சிலர் வெளியூரில் அல்லது உறவினர் வீட்டில் திடீரென்று இறந்துவிடுகிறார்கள். அதனால் அவர்கள் உடலை மருத்துவ கல்லூரிக்கு சேர்ப்பது முடியாமல் போகிறது.
 இதனால்தான் நான் தற்போது மதுரையைவிட்டு எங்கும் செல்வதில்லை!
5-12-2002 அன்றே நான் மதுரை மருத்துவகல்லூரி உடல்கூறு கழகத்தில் உடல்தானம் செய்வது சம்பந்தமாக விண்னப்பம் சமர்ப்பித்து, 3-1-03 அன்று கல்லூரி முதல்வரின் ஒப்புதல் கடிதமும் கிடைத்தது. இது போன்ற உடல்தனம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டால் அது மருத்துவ உலகிற்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

மருத்துவகல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் கவனத்திற்கு:  எதிர்கால கேடவர்களை, அவர்கள் குடும்பத்தினருடன் கல்லூரி விழாவிற்கு அழைத்து ஊக்கிவிப்பதன் மூலம், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட வாய்ப்புள்ளது.  மேலும் ஆண்டிற்கு ஒருமுறை புத்தாண்டு வாழ்த்து அட்டை அனுப்பி எதிர்கால கேடவர்களின் தற்போதய நிலைகுறித்தும் தெரிந்து கொள்ளலாம். எதிர்கால கேடவர்க்கு தற்போதய முகவரி, தொலைபேசி எண், உடல்தானம் செய்யும் இடத்தின் முகவரி போன்ற விபரங்களுடன் புகைபடம் ஒட்டிய அடையாள அட்டையையும் வழங்கலாம். சாலை விபத்தில் எதிர்பாராமல் சிக்கினால்கூட கேடவர்களை சம்பத்தப்பட்ட கல்லூரியில் ஒப்படைக்க ஏதுவாயிருக்கும்.

சம்பந்தபட்டவர்கள் கவனிப்பார்களா?          

No comments:

Post a Comment