Followers

Tuesday, June 11, 2013

B8. கண் தானம் செய்திடுவீர்..

 தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் 34 ஆண்டுகள் பணிபுரிந்து 31.8.2006 அன்று பணி ஓய்வுபெற்றேன். சாலைவிபத்து பற்றி ஆய்வு செய்வது எனது முக்கிய பணியாக இருந்தது. சாலை விபத்தில் உயிரிழப்பு கொடுமையானது. அதைவிட கொடுமை பார்வை இழப்பு! உயிர் இருந்தும் இல்லாத நிலை அது. பிறவியிலேயே பார்வை இழந்தவர்களைவிட, விபத்தில் பார்வை இழந்தவர்கள் நிலை மிககொடுமையானது. அதுவரை பார்த்து ரசித்த காட்சிகள் திடீரென மறுக்கபடுவதை அவர்கள் மனம் ஏற்றுகொள்வதில்லை. சிறுவயது முதலே எனக்கு பார்வையிழந்த நண்பர்கள் பலர் உண்டு. ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், மடிந்தோம் என்று எதற்கும்/யாருக்கும் பயன்படாமல் இருப்பதை நான் விரும்பவில்லை.
       கண் தானம் செய்ய முடிவு செய்தேன். 14-8-2002 அன்று கண்தானவங்கி, கண்சிகிசைப்பிரிவு, அரசு இராசாசி மருட்துமனை, மதுரை-625020 க்கு சென்றேன். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவரை, தலைவராககொண்ட, மதுரைமாவட்ட கண்பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை (பதிவு எண்.182/91) யில் வின்னப்ப படிவம் பெற்று பூர்திசெய்துகொடுத்தேன் அதன்படி...
  * 3/423 முல்லைநகர், தனக்கன்குளம், மதுரை-625006 இல் குடியிருக்கும் சரவணபவா ஆகிய நான் எனது இரு கண்களையும் என் மறைவிற்குபின் மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் கண்வங்கிக்கு தானமாக வழங்கியுளேன்.
 ** எனது மறைவுக்கு 6 மணி நேரதிற்குள் என்கண்கள் தானமாக எடுக்கபடும் என்றும், 36 மணிநேரத்துக்குள் பார்வை இழந்த இருநபர்களுக்கு பொருத்தப்பட்டு, அவர்கள் என்கண்கள் உதவியால் பார்வை பெருவார்கள் என அறிந்து மகிழ்ச்சி அடைகின்றேன்.
***  எனது உற்றார் உறவினர், எனது மறைவை உடனடியாக மருத்துவ அலுவலர், கண்தானவங்கி, கண்சிகிசைப்பிரிவு, அரசு இராசி மருட்துவமணை, மதுரை-625020

No comments:

Post a Comment