Followers
Wednesday, July 12, 2023
கருப்பையா தள்ளுவண்டி பஜ்ஜி:
கருப்பையா தள்ளுவண்டி பஜ்ஜி:
1989 ல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், மதுரை நகர் கிளை மேலாளராக பணியிளிருந்தபபோது ஒரு நாள்..
மாலை 5.௦௦ மணி ..பயணிகளை வெளியே இறக்கிவிட்டு டயர் பஞ்சர் என்று பணிமனை வந்தது நகர் பேருந்து. டயர்மேன் சிவா பணி முடிந்து வீட்டிற்கு புறப்பட்டவரை நிறுத்தி டயர் மாற்றி பயணிகளை விரைவில் பயணம் தொடரசெய்தேன். பிறகு டயர்மேன் சிவாவை அழைத்துக் கொண்டு, பணிமனை எதிர்புறம் சாலையோர தள்ளுவண்டியில் கருப்பையா பஜ்ஜி கடைக்கு சென்று இருவரும் பஜ்ஜி சாப்பிட்டோம்.
ஒரு மேலாளர் ஒரு தொழிலாளியுடன் சேர்ந்து சாலையோர கடையில் பஜ்ஜி சாப்பிட்டது ..அடுத்து வந்த கிளை மேலாளர் மீட்டிங்கில் விவாத பொருளாகிவிட்டது...அன்று எனது தரப்பில் நான் அளித்த விளக்கம்:
அலுவலர்களில் ஒரூ சிலருக்கு பைபிள் பிடிக்கும்..ஒரு சிலருக்கு குர்ரான் பிடிக்கும்..ஒருசிலருக்கு கீதை பிடிக்கும்.. அதுபோலத்தான் எனக்கு மார்க்சியம் பிடிக்கும்.அன்று டயர் பஞ்சராகி பயணிகளை பணிமனை வெளியே இறக்கிவிட்டு வந்த நகர் பேருந்தை, பணிமுடிந்து வீட்டிற்கு புறப்பட்ட தொழிலாளியை, பஞ்சர் டயரை மாற்றி பயணிகளுடன் நகர் பேருந்தை பயணம் தொடரசெய்தால்.. என் சொந்த செலவில் பஜ்ஜி சாப்பிடலாம் என்று சமாதானம் செய்து அவருடன் பஜ்ஜி சாப்பிட்டேன்.
அதிகாரி தொழிலாளி புரிதல் நன்றாக இருப்பதால், மக்கள் பணியில் தொய்வு இல்லாமல், நிறுவனத்திற்கு நல்ல பெயரும் கிடைக்கிறது.
என்னை ஒரு கம்யூனிஸ்ட் என்று தள்ளி வைக்காமல், ஒரு சிறந்த நிர்வாகியாக அனைத்து நிர்வாகிகளும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பெசிமுடித்தேன். அன்றைய மீட்டிங்முடிவில் அனைவரும் என்னை பாராட்டினர்.
மாற்றம் ஒன்றே மாறாதது..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment