நினைவில்
நின்றவை-7
1970 ஆகஸ்ட் மாதம் 17 ம் நாள் எனது மாற்று திறனாளி நண்பர் ராஜு எனக்கு பிரைல் எழுத்து பதிவு தகட்டினை
வழங்கி, ஒரு அட்டையை அதில் இணைத்து மூடி. அதில் உள்ள 6 தொளைகளில் ஒரு குத்தூசியால்
அழுத்தி, ஆங்கில எழுத்துக்களை எழுத கற்றுக் கொடுத்தார். அட்டையின் ஒருபக்கம் குத்தியதும்
அந்த இடம் பின்புறத்தில் புடைத்து, தடவிபார்க்கும்போது ஒரு புள்ளியை உணர முடிகிறது.
அந்த அட்டையை
இன்று எனது பழய பெட்டியிலிருந்து கண்டுபிடித்தேன்….நிணைவுகள் மலர்கிறது..
1970 ல் மதுரை
தொழிற்பேட்டையில் ELECTRIC CONTROL EQUIPMENT COMPANY ல் பயிற்ச்சியாளராக இரண்டு ஆண்டுகள்
பணியாற்றினேன். அன்றய நீதிக்கட்சியின் மதுரை பிரமுகர், மரியாதைக்குறிய அய்யா PTR அவர்களின்
குமாரர் திரு. கமலதியாகரஜன் அவர்கள் கம்பனியின் உரிமையாளர் மற்றும் இயக்குனர். அலன்
நித்தியானந்த லியோனார்ட் எனும் பொறியாளரின் கீழ் நானும், நண்பர் ராஜுவும் அப்போது அங்கு
தொழிற்பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தோம்.
லேத்மெசின், சிலாப்பிங்மெசின்,
மில்லிங்க்மெசின், டிரிலிங்மெசின் கொண்ட மெசின்சாப்பில் எனது நண்பர் ராஜு, பார்வைபடைத்த
என்னைவிட சிறப்பாக பணியாற்றுவார். என்னோடு கடித தொடர்பு வைத்துக்கொள்ள விரும்பினார்.
ஒரு பிரைல்மெசினை
வழங்கி அதில் அட்டையை இணைத்து, குதூசிமூலம் ஆங்கில எழுத்துக்களை பதிவு செய்ய கற்றுகொடுத்தார்.
அட்டையில் தகவல்களை புள்ளிகளாக இணைத்து மேடிட்டு, கடிதம் படைத்து, அதனை ஒரு கவரில்
வைத்து பசைதடவி ஒட்டி, கவரின் தலைப்பில் LETTER FOR THE BLIND என்று எழுதி, அதன்கீழ்
அவரது முகவரியை பேனாவில் எழுதி, தபால் பெட்டியில் போட்டுவிட்டால் போதும். கவர் எவ்வளவு
பெரிய அளவில் இருந்தாலும், தபால்தலை (stamp) ஒட்டதேவையில்லை.
நமது இந்திய அரசு
மாற்று திறனாளிகளுக்கு தகவல் தொடர்பில் இத்தகய சலுகையை வழங்கியிருப்பது அன்றுதான் எனக்கு
தெரியவந்தது. அப்போது எனக்கு வயது 22.
சில பல வருடங்களுக்கு
பிறகு,.. 1986 ல் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், மதுரை நகர்கிளையில், போக்குவரத்து
பொறியாளராக பணியிலிருந்த போது, எனது அலுவலகத்திற்கு தனது மணைவி மற்றும் 6 வயது மகனுடன்
வந்திருந்தார் நண்பர் ராஜு. மாற்று திறனாளிகளுக்கான நகர்பேருந்து இலவச அனுமதியட்டை
தனக்கும், தன்மணைவிக்கும் வாங்குவதற்கு ஒவ்வொரு மாதமும் எனது அலுவகத்திற்கு வருவதாக
தெரிவித்தார்.
அலுவலக நண்பர்களுக்கு
அவரை அறிமுகம் செய்து, அவருக்கு வேண்டிய உதவிகளை தாமதமின்றி செய்து கொடுக்கும்படி கூறிவிட்டு,
நண்பரிடம் நலம் விசாரித்தேன்.
பிறக்கும்போதே
தன்னைபோல் தன்மணைவியும் பார்வைதிறனற்றவர் என்றும், காதல் திருமணம் என்றும், பார்வையுள்ள
666666ஆறு வயது மகன் தங்களை வழிநடத்துவதாகவும், வாழ்க்கை சிறப்பாக உள்ளது என்றும் கூறினார்.
என்னைபற்றியும் அவரிடம் கூறி, மலரும் நிணைவுகளை பகிர்ந்துகொண்டோம்.
உங்களுக்கும்
பிரைல் மொழி பற்றிய புகைபடம் இங்கு இணைத்துள்ளேன்.
சாலையை கடக்க
முயலும் மாற்று திறனாளிகளுக்கு அவ்வப்போது சாலையை கடந்துசெல்ல உதவுங்கள். பேருந்து
நிறுத்தத்தில் காத்திருக்கும்போது அவர்கள் செல்லவேண்டிய பேருந்து வந்ததும், அவர்களுக்கு
தகவல்கொடுத்து, பேருந்தில் பயணம் செய்ய உதவுங்கள்.

All the
letters of English in ‘BRAIL’ is closed with in the six places as in Fig.
For Ex: A=1 B=1,2 C=1,4 D=1,4,5
E=1,5 Q=1,2,3,4,5
This is for
your understanding capacity only. It is not use without the help of BRAIL
MACHINE.
மீண்டும் சந்திப்போம்
-சரவணபவா
No comments:
Post a Comment