நினைவில் நின்றவை – 1
வருடம் 1958. ஒரு பொன்மாலைப் பொழுது.
மதுரை மீனக்ஷி அம்மன் கோவில், வடக்கு ஆடிவீதி திருவள்ளுவர்
கழகம்... சங்கம் முழங்கும் திரு மதுரைதனில்….என்று அங்கு அப்போது என் ஐந்தாவது வகுப்பு தோழன் TN சேசகோபாலன்
முழங்கிகொண்டிருந்தான்.. எனது அப்பா கணபதியப்பன், ( மதுரை, சம்பந்தமூர்த்தி பள்ளி தலைமை ஆசிரியர் ),
அவரது நண்பர் புலவர் செல்வகணபதி ஆகியோருடன் நானும் எனது நண்பனின் பாட்டில்
மெய்மறந்து நின்றவேலையில், எனது சிஷ்யன் சேசகோபாலன் பாட்டு எப்படி?
என்று எனது அப்பா தனது நண்பரிடம் பெருமையாக கேட்க, அதற்கு அவர் சொன்னதுதான் இன்றும் என் நினைவில் நின்றது.
என்ன கணபதி, உன்பள்ளி மாணவன் சேசகோபாலன் நன்றாக
பாடுவது உன்முயற்சியால் மட்டும் அல்ல. அவன் ஒழுக்கமான பிராமணன்.
பிராமணனின் ஜீனிலேயே திறமை கலந்துள்ளது. உனக்குத்தான்
நான்கு பசங்க இருக்காங்களே, அவங்கள்ள ஒருத்தனையாவது இப்படி பாடவைத்தால்,
நீ பெருமை படுவதில் அர்த்தம் இருக்கும் – என்று
கூற, கூட்டம் கலைந்து, வீட்டிற்கு வந்ததும்,
நாங்க நாலுபேரையும் உட்காரவைத்து, பாடச்சொல்லி,
தேர்வு வைத்து, சேசகோபாலன் நண்பனாகிய என்னை,
ஞானசூனியம் என்று என் அப்பா ஒதுக்கிவிட்டார். பின்னொருநாள்
…
மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், வடக்கு ஆடி வீதி, திருவள்ளுவர் கழகத்தில், எனது அண்ணன் அருணகிரிநாதன், சங்கம் முழங்கும் திரு மதுரைநகர்
தனில் என்று நன்றாகவே பாடி என் அப்பாவை
பெருமைப்பட வைத்தது தனி கதை. சாமிநாதன்,
சங்கரநாராயணன் – எனது இரு தம்பிகளும் இசை பயின்றபோது,
நான் பெரியார், மார்க்ஸ் பயில ஆரம்பித்தேன்.
இப்போது 37 ஆண்டுகள் பின்னோக்கி உங்களை அழைக்கிறேன்.
1995 ல் ஜானி எனக்கு அறிமுகம். பூர்வீகம் ராஜபாளையம்.
10 நாள் குட்டி ஆயினும் முரட்டுத்தனம். என்வீட்டு
காவல் பணிக்கு நியமித்தேன். மதுரை ஆயுதபடை குடியிருப்பில்,
நாய்களுக்கு பயிற்ச்சி அளிப்பவர், எனது நண்பர்
ராம்மூர்த்தி. ஜானிக்கு பயிற்சியளிக்க அழைத்தேன் அவரை.
அவரும் வந்தார். ஜானியை பார்த்தார். அப்போது அவர் கூறியது…
.
நாய்குட்டி பிறந்து 40 நாட்கள்
சென்றபின்புதான், அதற்கு பயிற்சியளிக்க முடியும். அதுவும் ஜெர்மன் செப்பேர்டு குட்டிகளுக்குத்தான் பயிற்சியளிக்க முடியும்.அவை ஹிட்லர் தனது போர்படையில் பயன்படுத்திய உயர்ஜாதி வகை. ராஜபாளையம் வேட்டைக்குத்தான் லாயக்கு. கீழ்படியும் குணம்
குறைவு. பயிற்சியை ஏற்றுகொள்ளாது. நானும்
இதுவரை ஜெர்மன் செப்பேர்டு குட்டிகளுக்குத்தான் 2 மாத பயிற்சி
கொடுத்துள்ளேன். ராஜபாளையம் போன்ற நாட்டு நாய்குட்டிகளுக்கு இதுவரை
நான் பயிற்சி கொடுத்த்தில்லை. அது சிறமம்.-அதற்கு நான் கூறியது அவரை சிந்திக்க வைத்த்து.அது
உயர்ந்த ஜாதிக்கு 2 மாதம் பயிற்சின்னா,
ராஜபாளையத்திற்கு 4 மாதம் பயிற்சி கொடுங்க.
பயிற்சி கட்டணம் இருமடங்கு அதிகமாக தருகிறேன். நீயும் நானும் உயர்ந்த ஜாதி என்று பட்டயத்தில் இல்லை. அதுபோல் இந்த ராஜபாளையம் குட்டியும், ஷெப்பேர்டை விட
தாழ்ந்தஜாதி என்று பட்டயத்தில் இல்லை. சிரமத்தைப் பாராமல் முயற்சிப்போம்.
என்று உற்ச்சாகப்படுத்தி, 4 மாத பயிற்சியும் முடிந்தது.
பயிற்சிக்குப்பின் ஜானியின் செயல்பாடுகள் மிக அற்புதம் அறிவு பூர்வமானது, வீரம் செரிந்தது. கட்டளைக்கு கீழ்படியும்
தன்மை அதிகம். குடும்ப உருப்பினராகிவிட்ட ஜானியை 11 ஆண்டுகள் கழித்து, ஒருவாரம் சென்னையில் அத்யாவசிய பணியின்
காரணமாக பிரிய நேர்ந்தது 7 நாட்களுக்குப்பின் மதுரை வீட்டிற்கு
திரும்பியபோது, ஜானி சோர்வாக வரவேற்றது. உடல் மெலிந்து இருந்தது. வயிற்றுபகுதியில் தோல் சிவந்திருந்த்து.
என். 7 நாள் பிரிவை தாங்கமுடியாமல், உணவு அருந்தாமல்,
குறைக்கும் சக்தியையும் இழந்திருந்த்து. 11 ஆண்டுகள் என்னுடன் வாழ்ந்த ஜானி சிரமப்படுவதை என்னால் பொறுக்க
முடியவில்லை. ஜானியின் டாக்டர் சங்கரலிங்கம் சிகிச்சையளித்தும்
தேறவில்லை. எவ்வளவுதான் உயர்தர சிகிச்சை அளித்தாலும்,
ஜானி 2 மாதத்தை கடப்பது கடினம்..குணமும் ஆகாது. என்று ஜானியின் டாக்டர் கைவிரித்துவிட்டார்.
2006 ல் ஒரு ஆம்புலன்சில் ஜானியை ஏறும்படி கட்டளையிட்டதுதான், எனது கடைசி கட்டளை. அதுவும் கட்டளைக்கு கீழ்படிந்து அம்புலன்சில்
ஏறியது. அனுப்பானடி கண்மாய்கரையில் ஜானியை இறக்கி, விசவூசி போட்டு, கருணைக் கொலை செய்து, நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்மூலம் நான் சொல்வது ஒன்றுதான்.. மனிதனோ, மிருகமோ, உயரம் எட்டுவதற்கு
பிறப்பு அவசியமில்லை. வளர்ப்புதான் அவசியம். உயர்கல்வி கிடைத்திருந்தால் நான் மேலும் உயரத்தை எட்டியிருப்பேன். ( ISRO விஞ்ஞானி வாய்ப்பை ஆங்கில மொழி புலமையின்றி தவரவிட்டவன் நான் ).
சங்கம் முழங்கும் திரு மதுரைநகர்தனில் இப்போதும் தினமும் நான் எனது மடிக்கணனியில்
கேட்டுக் கொண்டிருக்கிறேன். எனது 5
ம் வகுப்பு தோழன் TN.சேசகொபாலன் தற்போது தமிழகத்தின்
பிரபல சங்கீத வித்வானாக சென்னையில் ஜொலிக்கிறார். எனது அண்ணன்
அருணகிரிநாதன் திருநெல்வேலியில் TVS பணிமேலாலராக சிறந்த முறையில்
பணியாற்றி ஓய்வுபெற்று, அங்குள்ள கோவில்களில், விழாக்காலங்களில் தன் இசையால் இறைவனை மகிழ்வித்து வருகிறார்
TMS அவர்களின் அந்தகாலத்து தனிப்பாடல் – சங்கம் முழங்கும்
திருமதுரை நகர்தனில் – பாடலை எனது அண்ணன் அருணகிரிநாதனின்,,
மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளி தோழரும், எங்கள்
குடும்ப நண்பருமான ஸ்ரீமூலநாதன் ( தற்போது சென்னை, மும்பை டெல்லி, அமெரிக்கா என்று எங்கோ இருக்கிறார்
) அவர்கள்தான் எனது மெயிலுக்கு ( bhava1948@gmail.com ) சமீபத்தில் அனுப்பியுள்ளார். நன்றி அண்னா…
அனுப்பிய பாடல் ஒலி தேய்ந்துள்ளதால்,
உங்களிடம் நல்லநிலையில் இருந்தால் ,அந்த பாடலை
எனது மெயிலுக்கு அனுப்பிவையுங்களேன். உங்களுக்கும் மிக்க நன்றி.
மீண்டும் சந்திப்போம் -சரவணபவா
This comment has been removed by the author.
ReplyDelete